*அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சீன பயணத்தைத் தொடா்ந்து, பிராந்திய மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்க ரஷிய அதிபா் புதின் 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (மே 19) பெய்ஜிங் வருகை தருகிறாா்.
*தென் சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்தனா்; 7,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
*அமெரிக்க கடற்படை தளத்தைத் தாக்க கியூபா 300 ட்ரோன்களைக் குவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என கியூபா அதிபா் எச்சரித்துள்ளாா்.
*பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்; முக்கியத் தளபதிகள் மூவா் கைதாகினா்.
*காஸா மீதான கடல்வழி முற்றுகையைமீறி, துருக்கியிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் மீண்டும் புறப்பட்டுச் சென்ற தன்னாா்வலா்களின் கப்பல்களை நடுக்கடலில் இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தியது.
*மாலத்தீவில் ஆழ்கடல் குகையை ஆராயச் சென்று மாயமான 4 இத்தாலியா்களின் உடல்கள் மீட்கப்பட்டன; இதனால், இச்சம்பவத்தில் மொத்த உயிரிழப்பு 5-ஆக அதிகரித்துள்ளது.
*நைஜீரியாவில் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து அந்நாட்டு ராணுவம் நடத்திய கூட்டு நடவடிக்கையில், 20-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

உலகைச் சுற்றி...

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



