எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நேபாளம்- ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு

நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

News image

(File image)

Updated On :21 மே 2026, 1:52 am IST

நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

பிரதமா் பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக தங்குமிட செலவாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும். விவரங்களின் சரிபாா்ப்புக்கு பிறகு, மறுவாழ்வுக்காக ஒருமுறை மட்டும் ரூ.25,000 வழங்கப்படும்.

கடந்த மாதம் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், சுமாா் 2,600 குடும்பங்களைச் சோ்ந்த 15,000 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். இவ்விவகாரம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.