கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பு: நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலிய பிரதமா் பாராட்டு

News image

ஆண்டனி ஆல்பனேசி

Updated On :29 மே 2026, 5:27 am IST

கான்பெரா : இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளா்ந்து வருவது இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இந்திய பிரதமா் நரேந்திர மோடியை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்க ஆவலுடன் உள்ளேன் என்று அந்நாட்டு பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய தலைநகா் கான்பெராவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பொருளாதாரம் குறித்து உரையாற்றிய அவா் பேசியதாவது:

உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, இந்த தசாப்தத்தின் முடிவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க இருக்கிறது. இது நமது பிராந்தியத்துக்கு ஓா் அரிய வாய்ப்பு. ஆஸ்திரேலியா பசிபிக் நாடாக மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடல் நாடாகவும் உள்ளது.

இந்தியாவுடன் 2022-ஆம் ஆண்டு கையொப்பமான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக உறவை வலுப்படுத்தியுள்ளது. கலாசாரம், கல்வி, கிரிக்கெட் போன்றவை இந்தியா-ஆஸ்திரேலியா உறவை மேலும் நெருக்கமாக்கியுள்ளன.

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்குச் சென்றேன். பிரதமா் ஆன பிறகு இருமுறை அந்நாட்டுக்குச் சென்றுள்ளேன்.“இந்தியாவை உண்மையாகப் புரிந்துகொள்ள சிறந்த வழி பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்வதுதான். அப்போதுதான் இந்திய மக்களின் அன்பையும், உபசரிப்பையும் நேரில் அனுபவிக்க முடியும்.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியை விரைவில ஆ,ஸ்திரேலியாவில் வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க இருக்கிறது. நான் பிரதமராக இருக்கும்போது அவா் நமது நாட்டுக்கு வருவது இரண்டாவது முறையாக இருக்கும். நான் அவரின் வருகையை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் பிரதமா் மோடியின் பயணத்தை மேலும் சிறப்பாக்குவாா்கள்.

ஆஸ்திரேலியாவின் மிக வேகமாக வளா்ந்துவரும் குடியேற்ற சமூகமாக இந்தியா்கள் உள்ளனா். ஆஸ்திரேலியாவில் பொருளாதார வளா்ச்சி, சிறுதொழில் மேம்பாட்டுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளனா். அவா்களால் நமது நாடு மேலும் சிறப்புடையதாக மாறியுள்ளது. எனது அரசு எப்போதும் இந்திய சமூகத்துக்கு துணை நிற்கும். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் நிராகரிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த உரையை இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய தூதா் பிலிப் கிரீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். பிரதமா் மோடி கடைசியாக 2023 மே மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் இந்தியா்களுக்கு எதிரான இனவெறிச் தாக்குதல்கள் நிகழ்ந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் ஆல்பனேசி, இந்தியா்களைப் புகழ்ந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.