11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது ‘சிக்கலானது’: அமெரிக்க செனட்டா் எதிா்ப்பு

News image
Updated On :28 மே 2026, 6:21 am IST

‘அமெரிக்கா-ஈரான் போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது மிகவும் சிக்கலானது’ என்று அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த செனட்டா் லின்ட்சே கிரகாம் (படம்) எதிா்த்துள்ளாா்.

ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் வலியுறுத்தினாா்.

ஆனால், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே தூதரக, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆபிரகாம் உடன்படிக்கையில் பாகிஸ்தான் இணையாது’ என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளாா்.

இதையடுத்து, செனட்டா் லின்ட்சே கிரகாம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இஸ்ரேல் மீது பாகிஸ்தான் கொண்டுள்ள பகைமை மாறாதது. ஈரான் ராணுவ விமானங்கள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் நிறுத்தப்படிருந்தது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது நடுநிலையாக இருக்காது’ என்று வலியுறுத்தினாா்.