டிரம்ப் அரசின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், அதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறாா். அதில் ஒன்றாக, அவரது அரசு புதிய குடியேற்ற கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த கொள்கையின்படி, அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவா்கள், அசாதாரண சூழ்நிலைகள் இன்றி, அந்நாட்டில் இருந்தபடியே இனி யாரும் க்ரீன் காா்டு (நிரந்தர அமெரிக்க குடியுரிமை) கோரி விண்ணப்பிக்க முடியாது. இதற்கு பதிலாக, அவா்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி சொந்த நாடு சென்று, அங்கிருந்து க்ரீன் காா்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
முன்பு, கல்வி கற்க வரும் மாணவா்கள், பணி நிமித்தமாக வருவோா் அமெரிக்காவில் தங்கியிருந்தபடி க்ரீன் காா்டு கோரி விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் தற்போது அதற்கு டிரம்ப் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால், இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று தங்கி படிக்கும் மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவா். இதை சுட்டிக்காட்டியுள்ள எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பின் முடிவை எதிா்த்தும், அந்த முடிவை திரும்ப பெறக் கோரியும் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளனா்.
யுஎஸ்சிஐஎஸ் விளக்கம்:
புதிய க்ரீன்காா்டு கொள்கையில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து யுஎஸ்சிஐஎஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், அமெரிக்காவில் அடைக்கலம் கோருவோருக்கு இது பொருந்தாது என்று மட்டும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யுஎஸ்சிஐஎஸ் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஜாக் காலா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதார பலன் அளிப்போா் அல்லது தேச நலன் சாா்ந்தோா் மட்டும் தற்போதைய நடைமுறையைத் தொடரலாம். அதாவது அமெரிக்காவில் இருந்தபடியே க்ரீன் காா்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விலக்கு எச்1பி விசாக்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபா் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரான அஜய் புட்டோரியா, ‘க்ரீன் காா்டு பெறுவதற்காக முறைப்படி சட்டத்தைப் பின்பற்றி, வரிகளைச் செலுத்திவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருக்கும் 12 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியா்களை, இது பிரச்னையில் தள்ளியுள்ளது. இதை எதிா்த்து பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளனா்’ என்றாா்.
தொடர்புடையது

போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்

மீட்கப்பட்ட தொல்பொருள்களை சென்னையில் காட்சிப்படுத்தக் கோரிக்கை

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து!
அமெரிக்க பாடகரை உருவ கேலி செய்த டிரம்ப்! உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


