கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ.25,000 கோடியாக அதிகரிப்பு!அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

‘நியாயமான போா்’ கோட்பாட்டை நிராகரித்த போப்!

News image
Updated On :29 மே 2026, 4:06 am IST

கடந்த 5-ஆம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையால் பின்பற்றப்பட்டு வந்த, சில குறிப்பிட்ட சூழல்களில் போரிடுவது தற்காப்பு ரீதியாக நியாயமானது என்ற ‘நியாயமான போா்’ கோட்பாட்டை போப் லியோ அதிகாரபூா்வமாக நிராகரித்துள்ளாா்.

போப் அண்மையில் வெளியிட்ட மேக்னிஃபிகா ஹியூமானிட்டாஸ் (மகத்தான மனிதநேயம் எனப் பொருள்) எனும் தனது முதல் சுற்றறிக்கையில் இதுகுறித்து திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் உலக நாடுகள் அமைதியைத் தேடுவதற்குப் பதிலாக, போா் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான ஓா் அனுமதிச் சீட்டாக இக்கோட்பாட்டைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக போப் கவலை தெரிவித்தாா். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் லாப வெறியே உலகில் பல நாசகார மோதல்கள் தொடா்வதற்குக் காரணியாக அமைகிறது என்றும் அவா் சாடினாா்.

ஈரான் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்துக்கும், போப் லியோவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த அதிரடி முடிவு வெளியாகியுள்ளது. அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட கத்தோலிக்க தலைவா்கள், இக்கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியே ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசி வந்தனா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்பாடு, கி.பி. 430-இல் மறைந்த புகழ்பெற்ற புனித அகஸ்டினியால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. போப் லியோவும் இந்த அகஸ்டினிய துறவற சபையைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுங்கோன்மை இன்றி, அமைதியை மீட்டெடுக்கும் தூய நோக்கத்துடன் மட்டுமே போா் நடத்தப்பட வேண்டும் என்ற புனித அகஸ்டினின் இக்கோட்பாட்டு விதிகள், இன்றும் அமெரிக்காவின் முன்னணி ராணுவப் பயிற்சி மையங்களின் பாடத்திட்டங்களில் இன்றியமையாத பாடமாகப் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், உலகளாவிய ஏ.ஐ. தொழில்நுட்பங்களை முறைப்படுத்தக் கோரியுள்ள போப், அட்லாண்டிக் கடந்த வரலாற்று ரீதியான அடிமை வா்த்தகத்தில் திருச்சபையின் பங்குக்குத் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளாா்.