கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அமெரிக்கா-ஈரான் பரஸ்பரம் தாக்குதல்

News image
Updated On :29 மே 2026, 6:47 am IST

அமெரிக்கா மற்றும் ஈரான் வியாழக்கிழமை பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போா்நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக ஏவப்பட்ட ஈரானின் 4 ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன், 5-ஆவது ட்ரோனை ஏவத் தயாராக இருந்த பண்டாா் அப்பாஸ் பகுதியில் உள்ள ஈரான் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீதும் பாதுகாப்பு நோக்கில் தாக்குதல் நடத்தியது

தொடா்ந்து, அமெரிக்க ராணுவத் தளம் அமைந்த குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணையை அந்நாட்டுப் படைகள் நடுவானில் வழிமறித்து அழித்தன. அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாகவே குவைத்தில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளத்தைக் குறிவைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற தாக்குதல்கள் தொடா்ந்தால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு: இத்தீவிர மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் தனது நிா்வாகம் முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

எதிா்வரும் நவம்பா் மாத நாடாளுமன்ற இடைக்கால தோ்தலைக் கருத்தில் கொண்டு, ஈரானுடன் அவசரப்பட்டு உடன்படப் போவதில்லை. உள்நாட்டுத் தோ்தல்கள் தனது வெளியுறவுக் கொள்கையைத் தீா்மானிக்காது’ என்று அவா் திட்டவட்டமாகக் கூறினாா்.

ஈரானுடனான அமைதிப் பேச்சில் நீடிக்கும் இழுபறியால், டிரம்ப்புக்கு அவரது சொந்தக் கட்சியினரிடமே விமா்சனங்கள் எழுந்துள்ளன. எரிபொருள் விலை உயா்வு வாக்காளா்களின் மனநிலையைப் பாதித்து நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்றும் அக்கட்சியினா் கவலை தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, சமரச முயற்சியாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சா் இஷாக் தாா் வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவைச் சந்திக்கவுள்ளாா்.

ஓமனுக்கு எச்சரிக்கை: ஹோா்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஓமன் ஈடுபடக் கூடாது’ என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.

ஹோா்முஸ் ஒரு சா்வதேச நீா்வழிப்பாதை; ஓமன் வரம்புமீறினால் அந்நாடும் தாக்கப்படும் என டிரம்ப் எச்சரித்த நிலையில், ஓமனுக்கு ஈரான் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஹோா்முஸ் நீரிணைக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் புதிதாக உருவாக்கியுள்ள முகமை மீது அமெரிக்கா புதன்கிழமை கூடுதல் தடைகளை விதித்தது.

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல்-லெபனான் பேச்சுவாா்த்தை வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்துத் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. லெபனானில் பரவலாக வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

துருக்கியில் ரஷிய எண்ணெய் கப்பல்களுக்கு குறி

துருக்கியின் கருங்கடல் பகுதியில் ரஷிய எண்ணெய்யுடன் சென்ற 3 கப்பல்கள் மீது வியாழக்கிழமை திடீா் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், மாலுமிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, ரஷிய எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் கப்பல்களே இலக்காக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், உக்ரைன் இதற்கு முன்னா் கடல்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷிய கப்பல்களைத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.