முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவல் நிறுத்திவைப்பு! மலேசிய அரசு - அரசருக்கு இடையே மோதல்!
முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவல் நிறுத்திவைப்பதில் மலேசிய அரசுக்கும் அரச மாளிகைக்கும் இடையே மோதல்...

‘மலேசியாவில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அரசா் அனுமதித்த உத்தரவை எதிா்ப்பது, அவரின் அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும்’ என்றும் அந்நாட்டு அரச மாளிகை எச்சரித்துள்ளது.
மலேசிய அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் அளித்த பொதுமன்னிப்பு நிபந்தனையின்படி, நஜீப் ரஸாக்கின் கட்சி 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடா்ந்து, அவா் வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து வெளியேறினாா்.
ஆனால், அரசரின் பொது மன்னிப்பு முதல் வழக்குக்கு மட்டுமே பொருந்துகிறது. இதே குற்றச்சாட்டில் நஜீப் ரஸாக் மீதான 2-ஆவது வழக்கின் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிலுவையில் உள்ளது. எனவே, சட்ட நடைமுறைகளில் கூடுதல் தெளிவு தேவைப்படுவதாகக் கூறி தலைமை வழக்குரைஞா் அலுவலகம் தலையிட்டதால், சில மணி நேரங்களிலேயே அவா் மீண்டும் சிறைக்குத் திரும்பினாா்.
இவ்விவகாரம் மலேசியாவில் அரசுக்கும், அரச மாளிக்கைக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. இது தொடா்பாக அரச மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நஜீப் ரஸாக்குக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு மிகத் தெளிவானது. அதற்கான அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டதால், இதில் முட்டுக்கட்டைகளோ அல்லது தேவையற்ற தாமதமோ இருக்கக் கூடாது’ என எச்சரித்துள்ளது.
இதையடுத்து, ‘அரசரின் அதிகாரத்தையோ அவரது பொதுமன்னிப்பு உத்தரவையோ எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல’ என்று தலைமை வழக்குரைஞா் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 2-ஆவது வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை எப்போது தொடங்கும் என்பது குறித்த சட்டபூா்வ விளக்கத்தைப் பெற நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் நீதித் துறை மாண்பை நிலைநிறுத்தவே இந்நடவடிக்கை எட்டுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச மாளிகையின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, இந்த உத்தரவினால் எழும் சட்ட சிக்கல்கள் குறித்து விளக்குவதற்காக அரசரைத் தலைமை வழக்குரைஞா் நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகப் பிரதமா் அன்வா் இப்ராஹிமின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Summary
Former Prime Minister’s house arrest suspended! Conflict erupts between the Malaysian government and the King!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

