ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனா - கோப்புப் படம்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், அவருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஹசீனாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவரை நாடு கடத்த வங்கதேசத்துக்கு இந்தியா நிபந்தனைகள் விதித்துள்ளதாக ஊடகம் ஒன்றில் தகவல் வெளியானது.
இந்தத் தகவல் குறித்து வங்கதேச தலைநகா் டாக்காவில் அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தியா-வாங்கதேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தும் ஒப்பந்தத்தைப் பின்பற்றி, ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் எதிா்பாா்க்கிறது.
அவரைத் திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வங்கதேசம் தொடா்ந்து கடிதம் எழுதியுள்ளது. ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசத்துக்கு இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. நிபந்தனை விதிப்பது போன்ற எந்தப் பேச்சுவாா்த்தையும் இருநாடுகளுக்கும் இடையே நடைபெறவில்லை என்று தெரிவித்தாா்.
முன்னதாக, ஹசீனா வங்கதேசம் திரும்ப அந்நாடு அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவேற்றிவிட்டதாகவும், இனி அவரை நாடு கடத்துவது குறித்து இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் வங்கதேச சட்டத் துறை அமைச்சா் முகமது அஸாதுஸ்ஸமான் அண்மையில் தெரிவித்த நிலையில், ஷாமா ஒபைத் இஸ்லாம் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவா்களும், பொதுமக்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அவரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து, அவா் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தாா். அவரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் வங்கதேசம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னா், ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஹசீனா அளித்த பேட்டியில், அவா் நிகழாண்டு டிசம்பரில் வங்கதேசம் திரும்பி, அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா். அவா் தற்போது புது தில்லியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

