ஷேக் ஹசீனா நாடு திரும்புவது இந்தியாவின் கையில்தான் உள்ளது! - வங்கதேசம் அறிவிப்பு!
ஷேக் ஹசீனாவை மீண்டும் திருப்பி அனுப்புவது இந்தியாவின் கையில்தான் உள்ளது என வங்கதேச அரசு அறிவிப்பு...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - (கோப்புப் படம்)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாக, வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக, வங்கதேச சட்டத்துறை அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான் இன்று (நவ. 14) கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“எங்கள் தரப்பிலிருந்துத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் முடித்துவிட்டோம். இதற்கு அடுத்து என்ன செய்வது என்பது அவர்களின் (இந்தியா) கையில்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இருநாட்டு ஒப்பந்தம் மூலம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவது என்பது சட்டப்பூர்வமான செயல்முறைதான் என்றும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய சட்டத்தின் கீழ் வாய்ப்பு இல்லை என்றும் அசதுஸ்ஸமான் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நாடுதழுவிய மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கிருந்துத் தப்பிய அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவை குற்றவாளி எனக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The government of Bangladesh has announced that the processes to bring back Sheikh Hasina have been completed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


