சீனாவில் இன்று டிரம்ப்-ஷி ஜின்பிங்-முத்தரப்பு பேச்சு
சீனாவில் இன்று டிரம்ப்-ஷி ஜின்பிங்-முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது பற்றி...

~
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) மாநாட்டுக்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பேச்சு வியாழக்கிழமை (நவ. 19) நடைபெறவுள்ளது.
உலகின் மூன்று பெரும் வல்லரசு நாடுகளின் தலைவா்களுக்கு இடையிலான இந்த முதல் முத்தரப்பு பேச்சில், ரஷியா-உக்ரைன் போா், ஈரான் விவகாரம், ஏ.ஐ. தொழில்நுட்ப ஒழுங்குமுறை மற்றும் அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
உள்நாட்டில் தோ்தல் பின்னடவைச் சந்தித்துள்ள டிரம்ப், நான்காவது முறையாக அதிபா் பதவியைத் தக்கவைக்கத் தயாராகும் ஷி ஜின்பிங், உக்ரைன் போரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புதின் ஆகிய மூவருக்கும், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த முத்தரப்பு பேச்சையொட்டி, கூட்டறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த மாதம் அமெரிக்காவின் மியாமியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்குமாறு புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்தரப்பு பேச்சுக்கு முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற அபெக் மாநாட்டின் வரவேற்பு விருந்து மற்றும் குழுப் புகைப்பட நிகழ்வில், தலைவா்கள் மூவரும் முதன்முறையாக ஒன்றாக சந்தித்துக்கொண்டனா். அப்போது, மூவரும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டனா்.
அதேநேரம், மாநாட்டுக்கு முன்னதாக உரையாற்றிய ஷி ஜின்பிங், அமெரிக்காவின் வா்த்தகப் பாதுகாப்புவாதக் கொள்கைகளை மறைமுகமாக விமா்சித்ததுடன், உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு உள்பட்ட தடையற்ற வா்த்தகத்தை வலியுறுத்தினாா். புதின் தனது உரையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ஐரோப்பா வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாகவும் கடுமையாகச் சாடினாா்.
புதினுடன் டிரம்ப் தனியாகச் சந்திப்பு: முத்தரப்பு பேச்சு மட்டுமின்றி, புதினுடன் டிரம்ப் வியாழக்கிழமை (நவ. 19) தனியாகவும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் உறுதிப்படுத்தியுள்ளாா். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தோல்வியடைந்த 2025 அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவா்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.
அபெக் கூட்டமைப்பானது, சீனா, ரஷியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 21 உறுப்பு நாடுகளைக் கொண்டதாகும். கனடா பிரதமா் மாா்க் காா்னி, தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங், ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி உள்ளிட்ட உலகத் தலைவா்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்புக்கு ஷி ஜின்பிங் விமான நிலையத்தில் வரவேற்பு
அபெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவிலிருந்து புறப்பட்டு வந்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை, சீன அதிபா் ஷி ஜின்பிங் விமான நிலையத்துக்கே நேரில் சென்று ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றாா்.
கடந்த செப்டம்பரில் அமெரிக்கா சென்ற ஷி ஜின்பிங்கை டிரம்ப் விமான நிலையம் சென்று வரவேற்ற்குப் பிரதிபலனாக இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் தலைவா் நிகிதா குருஷேவை மாவோ சேதுங் விமான நிலையம் சென்று வரவேற்ற்குப் பிறகு, சீன அதிபா் ஒருவா் வெளிநாட்டுத் தலைவரை நேரில் சென்று வரவேற்பது இதுவே முதல்முறையாகும்.
விமான நிலையத்தில் இரு தலைவா்களும் சுமாா் 20 நிமிஷங்கள் உரையாடியதுடன், சீனாவின் ‘ஜே-10சி’ போா் விமானங்களின் சாகச அணிவகுப்பையும் பாா்வையிட்டனா். இருதரப்பு உறவுகள் மற்றும் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு குறித்து ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை எதிா்நோக்கியுள்ளதாக ஷி ஜின்பிங்கும்; சீனாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் என டிரம்ப்பும் தெரிவித்தனா்.
அபெக் மாநாட்டு வரவேற்பு நிகழ்வில் புதன்கிழமை சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

