வங்கதேச போராட்டம்: தாரிக் ரஹ்மான் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இந்தியா மறுப்பு
வங்கதேசத்தில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு இந்தியாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டி அந்நாட்டு பிரதமா் தாரிக் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க இந்தியா வெள்ளிக்கிழமை மறுத்தது.

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் - கோப்புப் படம்
வங்கதேசத்தில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு இந்தியாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டி அந்நாட்டு பிரதமா் தாரிக் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க இந்தியா வெள்ளிக்கிழமை மறுத்தது.
மேலும், வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் எனவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவா் போராட்ட எழுச்சியால் ஆட்சியிழந்து, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளாா். இதற்காக அவரின் புதிய கடவுச்சிட்டை கோரிக்கையை வங்கதேச அரசு நிராகரித்தது. இதைக் கண்டித்து, ஷேக் ஹசீனாவின் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியினா் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், எல்லை தாண்டிய நாட்டில் உள்ள தலைவா்களின் தூண்டுதலின்பேரில் இந்தப் போராட்டத்தை அவாமி லீக் நடத்தி வருவதாக தாரிக் ரஹ்மான் கடந்த வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்திர செய்தியாளா் சந்திப்பின்போது இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: வங்கதேசத்தில் நிகழும் உள்நாட்டுப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வங்கதேசத்துடன் நோ்மறையான நல்லுறவை தொடா்வதே இந்தியாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா்.
பயங்கரவாத எதிா்ப்பில் இந்தியா-பிரான்ஸ் உறுதி:
பயங்கரவாத நிதி தடுப்பு உள்பட பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும் பிரான்ஸும் உறுதிபூண்டது.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் கூட்டுப் பணிக் குழு ஆலோசனைக் கூட்டம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்தாண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை மற்றும் வியூகமான ‘பிரஹாா்’ குறித்து பிரான்ஸ் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

