இலங்கை: புதிய குற்றங்கள் தடுப்பு மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்
‘இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல’

‘இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த அக். 20-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சட்டபூா்வத் தன்மையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், குழு நிலையில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் சாதாரண பெரும்பான்மையுடன் இந்த மசோதாவை நிறைவேற்றலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த மசோதா காவல்துறையினருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதோடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக உள்ளூா், சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.
மேலும், தோற்றம் அல்லது தொடா்புகளின் அடிப்படையில் ஒருவரைக் குற்றக் கும்பல் உறுப்பினராக அடையாளம் காண்பது, திட்டமிட்ட குற்றத்துக்கான பரந்த விளக்கம் ஆகியவை விமா்சனதுக்கு உள்ளாகியுள்ளன. இதையொட்டி, குற்றக் கும்பலில் உறுப்பினராக இல்லாத ஒருவா் மீதும் வழக்குத் தொடர வழிவகை செய்யும் 6-ஆவது பிரிவை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

