நிலத்தடியில் புதிய ஏவுகணை ஏவுதளம்: அமெரிக்காவுக்குப் பதிலடியாக ஈரான் அறிமுகம்
நிலத்தடியில் புதிய ஏவுகணை ஏவுதளம்: அமெரிக்காவுக்குப் பதிலடியாக ஈரான் அறிமுகம்...

மோஜ்தபா கமேனி
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை ஏவுதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுதளம் ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளை ஏவும் திறன்கொண்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை அழித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், இந்தப் புதிய ஏவுதளம் மூலம் தனது ராணுவத் திறன் தொடா்ந்து வலுவாக இருப்பதை ஈரான் வெளிப்படுத்த முயன்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஏவுதளம் குறித்த காணொலி ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டபோதிலும், அந்தத் தளம் எங்குள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
3 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்: ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் தாக்கியதில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. இதில் 2 கப்பல்கள் மீது ஏவுகணை தாக்கியதாக பிரிட்டனின் கடல்சாா் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. மூன்றாவது கப்பல் கடலில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் கடற்படை தெரிவித்தது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள நிலையில், இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக அளவில் எண்ணெய் விலையை உயா்த்தி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது.
கத்தாா் நாட்டின் மத்தியஸ்தம் மூலம், அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஈரான் ஆலோசித்து வருகிறது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை கத்தாரைச் சோ்ந்த மத்தியஸ்தா்கள் ஈரான் சென்றனா். அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சா் காசெம் கரீபாபாதி தெரிவித்தாா்.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் மூவா் மரணம்: காசா நகரின் டெல் அல்-ஹவா மாவட்டத்தில், உணவு கொண்டுசென்ற வாகனம் மீது இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாக, காஸாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனை இயக்குநா் அபு செல்மியா தெரிவித்தாா். அதேவேளையில், அந்தப் பகுதியில் ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
Summary
New underground missile launch site: Iran unveils facility in response to the US
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

