இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கம்! 29 தொழிலாளிகள் நிலை என்ன?

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 29 தொழிலாளிகளை மீட்கும் பணிகள் தீவிரம்...

29 miners believed trapped by flooding in an unauthorized gold mine in Indonesia

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 29 தொழிலாளிகளை மீட்கும் பணிகள் தீவிரம் - கோப்புப் படம்

Updated On :

இந்தோனேசியாவில், வெள்ளத்தில் மூழ்கிய தங்கச் சுரங்கத்தில் சிக்கியுள்ள 29 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 2 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேற்கு ஜாவா மாகாணத்தின் போகோர் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில், கடந்த திங்கள்கிழமை (நவ. 23) சட்டவிரோதமான முறையில் தங்க வேட்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெய்த கனமழையால் அருகிலுள்ள சிசெரு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்து மூழ்கடித்துள்ளது. இதில், சுரங்கத்துக்குள் இருந்த சுமார் 29 தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தா நகரத்தின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 300 அடி ஆழம் கொண்ட அந்தச் சுரங்கத்தில், இன்றுடன் தொடர்ந்து 2 ஆவது நாளாகத் தண்ணீரை வெளியேற்றி தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சுரங்கத்திலிருந்த தொழிலாளர்களில் எத்தனைப் பேர் தப்பித்தார்கள்? மற்றும் சிக்கியவர்களின் நிலை என்ன? என்பவைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இந்தோனேசியாவில் விளிம்புநிலையில் வசிக்கும் மக்கள் சட்டவிரோதமாகப் பாதுகாப்பற்ற முறையில் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Indonesia, rescue operations to reach 29 workers trapped in a flooded gold mine are continuing for the second day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.