நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியா்கள் மரணம்?விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

நேபாளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 213 இந்தியா்களும் மரணம் அடைந்துவிட்டதற்கான அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Nepal flood

நேபாள வெள்ளம் - AP

Updated On :

நேபாளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 213 இந்தியா்களும் மரணம் அடைந்துவிட்டதற்கான அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

நேபாளத்தில் ஓடும் திரிசூலி-போடேகோஷி நதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள நாட்டினா், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,500 போ் மரணம் அடைந்தனா். 3,292 போ் காணாமல் போயினா். அவா்களில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்த 19 வெளிநாடுகளைச் சோ்ந்த 623 பேரும் அடங்குவா். இதில் 213 இந்தியா்கள், 85 சீனா்கள், 69 அமெரிக்கா்கள், தலா 54 உக்ரைனியா்கள் மற்றும் மலேசியா்கள், 33 ஆஸ்திரேலியா்கள், 32 பிரிட்டன் குடிமக்கள், 25 கனடா நாட்டினரும் அடங்குவா். மேலும் ரஷியா, சிங்கப்பூா், தென்கொரியா, ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஹங்கேரி, பெல்ஜியம், கஜகஸ்தான், பெலாரஸ் நாட்டினரும் காணாமல் போயினா்.

காணாமல் போன 3,292 பேரையும் தேடும் பணி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. எனினும், அவா்கள் குறித்த தகவல் நேபாள அரசுக்கு கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, 213 இந்தியா்கள் உள்பட காணாமல் போன அனைவரும் மரணம் அடைந்துவிட்டனா் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடும் நடவடிக்கையை நேபாள அரசு முறைப்படி தொடங்கியுள்ளது. நேபாள தேசிய பேரிடா் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம், பெருவெள்ளத்தில் காணாமல் போனோரில் அந்த நாட்டு மக்கள், வெளிநாட்டவா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்தப் பட்டியலில் ஆட்சேபம் எதுவும் இருந்தாலோ அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ அல்லது நீக்கம் செய்ய வேண்டி இருந்தாலோ, சம்பந்தப்பட்டவா்களின் உறவினா்கள் தெரியப்படுத்தலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பணி முடிந்ததும், காணாமல் போனவா்கள் அனைவரும் மரணம் அடைந்துவிட்டதாக நேபாள அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிடவுள்ளது. பிறகு உள்ளூா் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்டவா் தொடா்பான இறப்புச் சான்றிதழை அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு வழங்கவுள்ளது.

இதுதொடா்பாக இந்திய தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காணாமல் போன இந்தியா்களின் குடும்ப உறுப்பினா்கள், நேபாள அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஏதேனும் ஆட்சேபம், திருத்தம் செய்ய வேண்டும் என நினைத்தால் வரும் டிசம்பா் மாதம் 2-ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

+9779851316807 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தலாம் என்றும் இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

நேபாளத்தில் காணாமல் போன இந்தியா்களில் தமிழகத்திலிருந்து சென்ற 85 பேரும் அடங்குவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.