நேபாளத்தில் நிலநடுக்கம்: இந்தியா, வங்கதேசத்தில் அதிர்வுகள் உணரப்பட்டன!
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி...

கோப்புப் படம்
நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் இந்தியா, பூடான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளன.
இந்தியாவில் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியிலும் டார்ஜிலிங், ஜல்பாய்குரி மற்றும் கூச் பெஹார் போன்ற பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது அப்பகுதி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதனால் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை கூறப்பட்டது. நேபாளத்தின் கோஷி பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த உருவாகியுள்ளது.
சிக்கிமில் இருந்து 61 கி.மீ. தெற்கே இப்பகுதி அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
அதேபோல, அஸ்ஸாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் 15 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 2.5 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary
Earthquake in Nepal: Tremors felt in India and Bangladesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

