நேபாளத்தில் 6,476 மீட்டர் சிகரத்தில் ஏறிய 66 வயது அமெரிக்க மலையேற்ற வீரர் உயிரிழப்பு!
நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள 6,476 மீட்டர் (21,247 அடி) உயரம் கொண்ட மேரா சிகரத்தில் ஏறிய அமெரிக்க வீரர் உயிரிழந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நீண்டவரிசையில் காத்திருக்கும் மலையேற்ற வீரர்கள் - கோப்புப் படம்
நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள 6,476 மீட்டர் (21,247 அடி) உயரம் கொண்ட மேரா சிகரத்தை ஏறி முடித்த 66 வயதான அமெரிக்க மலையேற்ற வீரர், இறங்குகையில் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் உயரமான 14 சிகரங்களில் 8 நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிகரங்களில் ஏற வெளிநாட்டிலிருந்து மலையேற்ற வீரர்கள் பலர் நேபாளத்திற்கு வரும் நிலையில், அந்நாட்டிற்கு இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரிழிவுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்த அச்சம் அரசிற்கு ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலான மலையேற்ற வீரர்கள் தங்களின் பயணங்களை ரத்து செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 66 வயதான அமெரிக்க மலையேற்ற வீரர் ரிச்சர்ட் கார்லோஸ் ஸ்கிட்மோர் என்பவர் நவ. 21 அன்று காலை 10 மணியளவில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதியில் 6,476 மீட்டர் (21,247 அடி) உயரம் கொண்ட மேரா சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
பின்னர், கீழிறங்கும் பாதையில் சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முகாமில் இரவு அவர் தங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (நவ. 22) காலை அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்திள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
Summary
66-year-old American mountaineer dies after scaling a 6,476-meter peak in Nepal!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


