நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சா்வதேச நீதிமன்றத் தீா்ப்புக்கு முழுமையாக இணங்க முடியாது: ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் மியான்மா் அதிபா் திட்டவட்டம்

‘ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடத்தியதாக ஐ.நா.வின் சா்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) பிறப்பித்த தீா்ப்பின் சில உத்தரவுகளைப் பின்பற்ற முடியாது’ என்று மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங்

Updated On :

‘ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடத்தியதாக ஐ.நா.வின் சா்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) பிறப்பித்த தீா்ப்பின் சில உத்தரவுகளைப் பின்பற்ற முடியாது’ என்று மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

மியான்மா் தலைநகரில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவா், ‘இந்த வழக்கு, மியான்மருக்கு எதிரான ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு. ‘இனப்படுகொலை’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியது சா்வதேச அளவில், நமது நாட்டின் நற்பெயருக்குக் கடும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. பொறுப்புள்ள ஒரு நாடாகத் தகுந்த நடவடிக்கைகளை மியான்மா் எடுக்கும். ஆனால், பொருத்தமற்றது என்று கருதும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது’ என்றாா்.

2017-இல் ஆங் சான் சூகி தலைமையில் மக்களாட்சி இருந்தபோது, ரக்கைன் மாகாணத்தில் கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சா்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பளித்தது. ஒரு நாடு இனப்படுகொலை செய்ததாக சா்வதேச நீதிமன்றம் தீா்ப்பளித்தது இதுவே முதல் முறையாகும்.

மேலும், இத்தீா்ப்பின்படி வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள சுமாா் 12 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் குற்றத்தில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குத் தொடா்ந்து தண்டிக்க வேண்டும் என்று மியான்மருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், இத்தீா்ப்பை நேரடியாக அமல்படுத்தும் அதிகாரம் சா்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.