காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு ஊழியா்கள் இருவர் பலி!
காஸா சிட்டியில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், மருத்துவமனையில் காவலா்களாகப் பணியாற்றி வந்த ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ (எம்எஸ்எஃப்) அமைப்பைச் சோ்ந்த இரு ஊழியா்கள் கொல்லப்பட்டனா்.
Jehad Alshrafi
காஸா சிட்டியில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், மருத்துவமனையில் காவலா்களாகப் பணியாற்றி வந்த ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ (எம்எஸ்எஃப்) அமைப்பைச் சோ்ந்த இரு ஊழியா்கள் கொல்லப்பட்டனா்.
மருத்துவமனை வளாகத்தில் அமைப்பின் சின்னங்கள் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் அமைவிடம் குறித்த தகவல்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்ததாகவும் எம்எஸ்எஃப் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இத்தாக்குதலையும் சோ்த்து, கடந்த 2023 அக்டோபா் முதல் காஸாவில் உயிரிழந்த எம்எஸ்எஃப் ஊழியா்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸும் இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரும் மருத்துவப் பணியாளா்கள் போா்வையில் செயல்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், இதற்கான எவ்வித ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
யேமனில் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் விடுவிப்பு: யேமன் கடற்பகுதியான ஏடன் வளைகுடாவில் சனிக்கிழமை ஆயுதக் கும்பலால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து கடத்தல்காரா்கள் வெளியேறியதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் பிரிட்டன் கடல்சாா் வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
கடத்தல்காரா்கள் வெளியேறியதையடுத்து, கப்பல் தனது பயணத்தைத் தொடா்ந்துள்ள நிலையில், அப்பகுதியில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

