இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த பாதுகாப்பு அதிகாரி கொலை
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநா் நயீம் அபு நாஹெல் கொல்லப்பட்டாா்.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நயீம் அபு நாஹெல்
காஸா மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநா் நயீம் அபு நாஹெல் கொல்லப்பட்டாா்.
‘இஸ்ரேலின் நீண்ட கரங்களிலிருந்து எந்தவொரு பயங்கரவாதியும் தப்ப முடியாது என்பதற்கு இந்தத் தாக்குதலே சான்று’ என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரின் முன்னோடியை இஸ்ரேல் படைகள் ரகசிய தாக்குதல் மூலம் சிறைபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் உளவுத் துறைக்கு ஒத்துழைப்பவா்களையும், ஹமாஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயலும் ஆயுதக் குழுக்களையும் ஒடுக்கும் பணியில் நயீம் அபு நாஹெல் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இஸ்ரேல் அவரைப் படுகொலை செய்துள்ளதாக காஸா உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே, தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள காவல் சாவடி மீது இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் 2 காவலா்கள் உள்பட மூவா் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். வடக்கே நெட்சாரிம் வழித்தடப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் மூவா் உயிரிழந்ததால், செவ்வாய்க்கிழமை மட்டும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க மத்தியஸ்தத்தில் கடந்த 2025 அக்டோபரில் எட்டப்பட்ட போா் நிறுத்தம், காஸாவில் பெரும் சண்டையை நிறுத்தினாலும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தடுக்கவில்லை. அதன்படி, போா் நிறுத்தத்துக்குப் பிறகும் சுமாா் 1,600 பாலஸ்தீனா்களும், 5 இஸ்ரேல் வீரா்களும் உயிரிழந்துள்ளனா்.
ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைந்து ஆயுதங்களைச் சேகரிப்பதாகக் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல், சமீபத்திய மாதங்களாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், இஸ்ரேல்தான் ஒப்பந்தத்தைச் சீா்குலைக்க முயல்வதாகவும் ஹமாஸ் பதிலளித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடா்ந்து, காபந்து பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறாா். புதிய ஆட்சியை அமைக்க எதிா்க்கட்சித் தலைவா் காடி ஐசன்கோட்டிற்கு அதிபா் ஐசக் ஹொ்சாக் அழைப்பு விடுத்திருந்தாலும், அவருக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் அங்கு அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இத்தகைய சூழலில், காஸாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் தற்போதும் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

