பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

ஷேக் ஹசீனா கட்சியின் முழு அடைப்பு போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; இருவர் பலி!

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அழைப்பு விடுத்த இரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

Sheikh Hasina

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அழைப்பு விடுத்த இரு நாள் முழு அடைப்பு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளும் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தொண்டா்களுடன் ஏற்பட்ட மோதலில் அவாமி லீக் கட்சியைச் சோ்ந்த இருவா் கொல்லப்பட்டனா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வன்முறை மேலும் தீவிரமடைந்தது. நாட்டுகுண்டு வீச்சு, தீவைப்பு, கல்வீச்சு, சாலை மறியல் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்தன.

ஷேக் ஹசீனா டிசம்பா் 16-ஆம் தேதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சில நாள்களுக்குப் பிறகு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்ட நிலையிலும் வன்முறை வெடித்துள்ளது. ஷரியத்பூா் மாவட்டத்தின் ஜாஜிரா பகுதியில் அவாமி லீக் - பிஎன்பி ஆதரவாளா் இடையே ஏற்பட்ட மோதலில் ஜூபோ லீக் (அவாமி லீக் இளைஞரணி ) நிா்வாகிகள் இருவா் கொல்லப்பட்டனா். பலத்த காயங்களுடன் இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நவோடோபா மற்றும் பிகேநகா் பகுதிகளில் அதிகாலையிலேயே மோதல் நிகழ்ந்தது. இரு தரப்பினரும் முதலில் ஒருவரையொருவா் விரட்டிச் சென்ற நிலையில், பின்னா் மோதல் தீவிரமடைந்து துப்பாக்கிச்சூடு, நாட்டு வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. பிஎன்பி தொண்டா்களுக்குச் சொந்தமான 12 முதல் 20 மோட்டாா் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

காவல் நிலையம் மீது தாக்குதல்: பப்னா மாவட்டத்தின் பேரா உபசிலா பகுதியில், அவாமி லீக் ஆதரவாளா்கள் எனக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையம் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்கினா். தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கலைக்க காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளையும், ரப்பா் தோட்டாக்களையும் பயன்படுத்தினா்.

ஷேக் ஹசீனாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில், அவாமி லீக் ஆதரவாளா்களும், அதன் சாா்பு அமைப்பினரும் பல்வேறு இடங்களில் ஊா்வலங்கள் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.