வங்கதேசம்: ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு! நிர்வாகி சுட்டுக்கொலை!
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி சுட்டுக்கொலை...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - நரைல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை... - ANI
வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் தௌலத்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கல்பதாரு சந்தைப் பகுதியில், அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி அப்துல் ஹாலிம் ஷேக் (வயது 40) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 24) இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, வங்கதேச அதிகாரிகள் கூறுகையில், கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து, ஹாலிமின் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவ. 24 ஆம் தேதி வரை குல்னா மாவட்டத்தில் சுமார் 81 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அவரது அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஏற்கெனவே, கடந்த நவ. 20 ஆம் தேதி நரைல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான 50-க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
In Bangladesh, it has been reported that a senior official from former PM Sheikh Hasina’s Awami League party has been shot dead.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


