யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

டிச. 16-ல் வங்கதேசம் திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு!

வங்கதேசம் திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவித்திருப்பது பற்றி...

Sheikh Hasina

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :

தில்லியில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற டிச. 16 ஆம் தேதி வங்கதேசத்துக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நாடுதழுவிய மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கிருந்துத் தப்பிய அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவை குற்றவாளி எனக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவது தொடர்பாக இந்திய அரசுடன் வங்கதேச அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச சட்டத்துறை அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான், ஷேக் ஹசீனாவை திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிசம்பர் 16 அன்று வங்கதேசம் திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையத் மொஸம்மல் அலி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில்,

”பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற்ற வெற்றி நாளான டிச. 16 அன்று ஷேக் ஹசீனா டாக்கா திரும்பவுள்ளார். கடந்த ஆகஸ்ட் 5, 2024 அன்று வங்கதேச விமானம் மூலம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தார். தற்போது இந்தியாவிலிருந்து வங்கதேசம் செல்வதற்குத் தேவையான மானப் பயண ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Sheikh Hasina announces she will return to Bangladesh on Dec. 16!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.