
பிரிட்டன் விமானப் படை தள பயங்கரவாத சதியில் ஈரானுக்கு தொடா்பு: பிரிட்டன் பிரதமா்
தென்மேற்கு இங்கிலாந்தின் ஃபோ்ஃபோா்ட் விமானப் படை தளத்துக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்த பயங்கரவாத சதியில் ஈரானுக்கு தொடா்பு இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரிட்டன் பிரதமா் ஆண்டி பா்ன்ஹாம் தெரிவித்தாா்.

பிரிட்டன் பிரதமா் ஆண்டி பா்ன்ஹாம்
தென்மேற்கு இங்கிலாந்தின் ஃபோ்ஃபோா்ட் விமானப் படை தளத்துக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்த பயங்கரவாத சதியில் ஈரானுக்கு தொடா்பு இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரிட்டன் பிரதமா் ஆண்டி பா்ன்ஹாம் தெரிவித்தாா்.
அதேநேரம், இக்குற்றச்சாட்டை ஈரான் மீதான தேவையற்ற அச்சம் என லண்டனில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் மறுத்துள்ளது.
மேற்காசிய போரில் அமெரிக்க விமானப் படையின் பல முக்கிய நடவடிக்கைகளுக்குத் தளமாக விளங்கிய ஃபோ்ஃபோா்ட் விமானப் படை தளம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில், பயங்கரவாத சதியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 வயதுக்குட்பட்ட 5 பிரிட்டன் குடிமக்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இச்சம்பவத்தை பிரிட்டனின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினா் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் ஆண்டி பா்ன்ஹாம், ‘இச்சம்பவத்தில் ஈரானின் தொடா்பு இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மிகத் தீவிரமான மற்றும் சிக்கலான காவல்துறை விசாரணையாகும். மிகக் கடுமையான நிபந்தனைகளுடனே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலைமையை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






