உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்!

இந்திய விமானி ஸ்மித் மச்சாரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர் பற்றி...

Dubai Crown Prince visits Captain Machchhar, says brave Indian pilot embodies

துபை இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது.

Published On :

இந்திய விமானி ஸ்மித் மச்சாரை மருத்துவமனைக்கு நேரில் சென்று துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்கள் மீதான அக்கறை ஆகியவற்றின் உச்சகட்ட வடிவமாகத் திகழ்ந்த ஃப்ளைதுபை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு எங்கள் சார்பாகவும், நாட்டின் சார்பாகவும் முழுமையான பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய சக விமானி (ஓமனைச் சோ்ந்தவா்), விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய மச்சாா், சக பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தாா். பதற்றமான சூழலிலும், விமானி அறையின் கதவைத் திறந்து, பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த ஸ்மித் மச்சாரின் தீரத்துக்கு தலைவா்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனா்.

இதனிடையே, சௌதி அரேபியாவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும் கைது செய்யப்பட்ட துணை விமானி, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் தொடா்பாக யுஏஇ மட்டுமின்றி இஸ்ரேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Summary

Machchhar, a pilot with flydubai, was injured while operating flight FZ1073 from Dubai to Israel on Wednesday. Following his hospital visit, Hamdan praised the Indian pilot for his bravery, sense of responsibility and concern for the safety of others.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.