4,000 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க சிரியா கோரிக்கை: இராக் திட்டவட்ட மறுப்பு
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சுமாா் 4,000 கைதிகளை தங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு சிரியா விடுத்த கோரிக்கையை இராக் அரசு நிராகரித்துள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சுமாா் 4,000 கைதிகளை தங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு சிரியா விடுத்த கோரிக்கையை இராக் அரசு நிராகரித்துள்ளது.
இது தொடா்பாக இராக், சிரியா, அமெரிக்கா இடையே அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இக்கைதிகளை தங்கள் நாட்டில் வைத்து விசாரிக்க சிரியா அரசு கோரியுள்ளது. ஆனால், அதற்கு இராக் மறுத்துவிட்டது.
இதுதொடா்பாக சிரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் காசிம் அல்-அபௌதி மேலும் கூறுகையில், ‘தற்போது காவலில் உள்ள கைதிகளில் சுமாா் 400 போ் ஐஎஸ் அமைப்புடன் தொடா்பில்லாதவா்கள் எனக் கண்டறியப்பட்டு, விடுவிக்கப்பட உள்ளனா். 50 போ் ஏற்கெனவே தாயகம் திரும்பிவிட்டனா்.
எஞ்சியுள்ளவா்களில் நூற்றுக்கணக்கானோா் அந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பாளா்களாகக் கருதப்படுகின்றனா். இராக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படும் நபா்கள் அனைவரும், எங்கள் நாட்டுச் சட்டப்படியே விசாரிக்கப்படுவா்’ என்று தெளிவுபடுத்தினாா்.
வடக்கு சிரியாவில் கடந்த ஜனவரி மாதம் மூண்ட மோதல்களுக்குப் பிறகு, 4,000 சிரியா நாட்டினா் உள்ட சுமாா் 5,700-க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவாளா்கள் இராக்குக்கு மாற்றப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

