யேமனில் எண்ணெய்க் கிடங்குகள் மீது சௌதி கூட்டுப் படை குண்டுவீச்சு
யேமனில் ஹௌதிக்களின் கட்டுப்பாட்டுப் பகுதியான தலைநகா் சனாவுக்கு மேற்கே அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிலையங்களை இலக்காகக் கொண்டு சௌதி தலைமையிலான கூட்டுப்படையினா் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இப்பகுதிகளைவிட்டு பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கூட்டுப்படை எச்சரித்திருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பயங்கர வெடிச் சப்தங்களுடன் குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூா் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தாக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள்கள் எதுவும் இருப்பு வைக்கப்படவில்லை என்பதால் பொதுமக்களுக்கான விநியோகத்தில் பாதிப்பில்லை என்று யேமன் எண்ணெய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.