ஒரு சமூகத்தை குண்டுகள், ஏவுகணைகளால் சரணடைய வைக்க முடியாது! - ஈரான் அதிபர் பேச்சு!
ஒரு சமூகத்தை குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சரணடைய வைக்க முடியாது என ஈரானிய அதிபர் பேச்சு...

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் - ஏபி
ஒரு சமூகத்தை குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சரணடைய வைக்க முடியாது என ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
இதையடுத்து, ஈரானின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அமெரிக்காவுக்கு ஆதரவான வளைகுடா நாடுகளின் மீது ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் ஒரு சமூகத்தை எதிராளிகளால் சரணடைய வைக்க முடியாது என ஈரானிய அதிபர் பெஷேஷ்கியன் இன்று (அக். 15) கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“உங்களால் ஒரு சமூகத்தை குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சரணடைய வைக்க முடியாது. ஆனால், நாம் பிரிந்திருந்தாலோ நமக்குள் பிரிவுகள் ஏற்பட்டாலோ எதிரிகள் தங்களின் இலக்குகளை அடைவார்கள்.
நாம் தேசிய ஒற்றுமையை வலிமைப்படுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். எதிர்கால சிக்கல்களை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் பொருளாதாரத் தடைகளால், ஈரானின் ஏற்றுமதி, இறக்குமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Iranian President Masoud Pezeshkian has stated that a society cannot be forced to surrender through bombs and missiles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


