ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அமெரிக்காவில் இந்தியர்களைக் கொல்ல சதி! கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட நபர் கைது!

அமெரிக்காவில் இந்து கோயிலில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Alexandros Paporakis

அமெரிக்க காவல் துறையால் கைது செய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரோஸ் பாபோராகிஸ்.. - எக்ஸ்

Updated On :

அமெரிக்காவில், இந்தியர்களைக் குறிவைத்து இந்து கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகாகோ அருகிலுள்ள பாலடைன் எனும் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரோஸ் பாபோராகிஸ் எனும் 19 வயது இளைஞர் அபாயகரமான மின்னணு சாதனங்களை வாங்கியுள்ளதாகவும், அவர் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாகவும், காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை (அக். 14) அலெக்ஸாண்ட்ரோஸின் வீட்டில் காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், துப்பாக்கி மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெள்ளை இன மேலாதிக்கப் பயங்கரவாதத்தைக் குறிக்கும் வகையிலான குறியீடுகள் அடங்கிய பாதுகாப்பு கவசமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்துடன், அவரது வீட்டிலிருந்து “நான் ஏன் சண்டையிட்டேன்” எனும் தலைப்பில் அடங்கிய ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களில், தெற்காசியர்களைக் குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்படுத்தவும், இந்தியர்களைக் கொல்ல தன்னால் காத்திருக்க முடியவில்லை எனவும் அலெக்ஸாண்ட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், பாலடைனில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலுள்ள அரோரா நகரத்தில் அமைந்திருக்கும் இந்து கோயிலின் மீது வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்த அலெக்ஸாண்ட்ரோஸ் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, வெள்ளை இன மேலாதிக்கச் சிந்தனைகள் மற்றும் கடுமையான குடியேற்றச் சட்டங்கள் ஆகியவை அதிகரிப்பதால், சமீபகாலமாக அமெரிக்காவில் தெற்காசியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

In the US, a 19-year-old man has been arrested for planning a shooting at a Hindu temple, with Indians as the intended targets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.