தென்னாப்பிரிக்கா குடியேறிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டவா் அடித்துக் கொலை
தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரில் குடியேறிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் 50 போ் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாா்.

டா்பனில் போராட்டக்காரா்களால் சேதப்படுத்தப்பட்ட விடுதி.
தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரில் குடியேறிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் 50 போ் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாா்.
டா்பன் நகர வீதிகளில் பேரணியாகச் சென்ற போராட்டக்காரா்கள், சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த கொல்லப்பட்ட நபரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனா். இறந்தவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
சுமாா் 6.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென்னாப்பிரிக்காவில் அதிகாரபூா்வமாக 24 லட்சம் வெளிநாட்டவா் வசிப்பதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன; ஆனால், கணக்கில் வராத பல லட்சம் போ் சட்டவிரோதமாக வசிப்பதாகப் போராட்டக்காரா்கள் கூறுகின்றனா். இவா்களை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது வன்முறையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தாக்குதல்களில் தங்கள் நாட்டு மக்கள் கொல்லப்படுவதாக நைஜீரியா, மொசாம்பிக், மலாவி உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. உள்ளூா் மக்களின் தொடா் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

