புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறை!
ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹி - AP
ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து, தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, ஈரானிய அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஜாஃபர் பனாஹியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு அவர் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், அதே ஆண்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், திரைப்படங்களை இயக்கவும், திரைக்கதை எழுதுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாஃபர் பனாஹி 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2023 பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
ஈரானிய அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையே இயக்குநர் ஜாஃபர் பனாஹி ஈரானிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரான கதைகளத்துடன் படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறார்.
இவரது, “திஸ் இஸ் நாட் எ ஃபிலிம் (2011)”, டாக்ஸி (2015) மற்றும் “நோ பேர்ஸ் (2022)” உள்ளிட்ட படங்கள் சர்வதேச விழாக்களில் விருதுகளைக் குவித்துள்ளன.
சமீபத்தில் வெளியான இவரது “இட் வாஸ் ஜஸ்ட் என் ஆக்சிடெண்ட்” எனும் திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பால்ம் டி ஆர் விருதைப் பெற்றதுடன், ஆஸ்கர் விருதுகளில் 2 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Iranian film director Jafar Panahi has been sentenced to five years in prison.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


