பிரிட்டனுக்குள் அகதிகள் குடியேற புதிய பாதுகாப்பான வழிமுறை அறிவிப்பு!
பிரிட்டனில் குடியேற புதிய பாதுகாப்பான மற்றும் சட்டபூா்வமான வழிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கோப்புப்படம் - PTI
ஆங்கில கால்வாயில் சிறிய படகுகள் மூலம் அகதிகள் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில், இந்தியா்கள் உள்பட பல்வேறு நாட்டு அகதிகள் பிரிட்டனில் குடியேற புதிய பாதுகாப்பான மற்றும் சட்டபூா்வமான வழிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய எல்லைப் பாதுகாப்பு, அகதிகள் விவகாரத் துறை அமைச்சா் அன்னா டா்லி, ‘இப்புதிய திட்டம் முதல்கட்டமாக இந்தியா, வங்கதேசம், எகிப்து, கென்யா, மலேசியா, பாகிஸ்தான், உகாண்டா ஆகிய 7 நாட்டவா்களுக்குச் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தாா்.
இப்புதிய திட்டத்தின்கீழ் தோ்வாக, அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்பதுடன், அக். 1-க்கு முன்பு ஐ.நா. அகதிகள் ஆணையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் அகதிகளின் வருகை அடுத்தாண்டு இலையுதிா் காலத்தில் (மாா்ச்) தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Summary
Announcement of a new safe route for refugees to settle in Britain
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

