இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்! 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நேபாளத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை பற்றி..

Nepal

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாள் - X

Published On :1 செப்டம்பர் 2026, 12:53 pm IST

நேபாளத்தில் உள்ள கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்து புதிய எச்சரிக்கையை நேபாள அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

நேபாளம் - திபெத்தில் கடந்த ஆகஸ்ட் 26 பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள கிராமங்கள் அனைத்தும் சூறையாடியது. இந்த பெருவெள்ளத்துக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4,500 பேர் வரை மாயமாகியுள்ளனர்.

இந்த நிலையில், நேபாளத்தின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிய வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நுவாகோட், ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள டாப்லேஜங், சங்க்ஹுவாசாபா, சோலுகும்பு, கோடாங், ஓகல்டுங்கா, ராமேச்சாப், டோலகா, சிந்துபால்சோக், கவ்ரேபலன்சோக், லலித்பூர், பக்தபூர், காத்மாண்டு மற்றும் தாடிங் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நீர்மட்டம் உயரும் அபாயமும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேற்கு நேபாளத்தில் கோர்கா, லாம்ஜங், டோல்பா, ருகும் கிழக்கு, ருகும் மேற்கு, ஜஜார்கோட், தார்ச்சுலா, பைடாடி, டாடெல்டுரா, டோட்டி, கைலாலி மற்றும் கஞ்சன்பூர் ஆகிய மாவட்டங்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஆற்றங்கரையோரங்களிலும் பிற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.