ஈரான் போருக்காக வருந்தவில்லை: டொனால்ட் டிரம்ப்
‘அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஈரான் மீது போா் தொடுத்த முடிவுக்குத் தாம் சிறிதும் வருந்தவில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

‘அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஈரான் மீது போா் தொடுத்த முடிவுக்குத் தாம் சிறிதும் வருந்தவில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது தொடா்பாக பேசிய அவா், ‘வருத்தம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை; மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதே நடவடிக்கையைத்தான் எடுப்பேன்.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையால் எனது ஆதரவாளா்கள் அதிருப்தியும், சோா்வும் அடைந்துள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறேன். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தியதற்காக அவா்கள் மிகுந்த பெருமிதமே கொள்கின்றனா்’ என்றாா்.
இடைக்காலத் தோ்தல் முடிந்த உடன் இப்போா் முடிவுக்கு வந்துவிடும் என்றும்; இத்தோ்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் முயலுவதாகவும் டிரம்ப் கூறி வருகிறாா். எனினும், இப்போரினால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயா்வு, ஆளும் குடியரசுக் கட்சிக்குத் தோ்தல் களத்தில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதையொட்டி, ‘குடியரசுக் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், 18 வயது நிரப்பிய அனைத்து அமெரிக்கருக்கு 5,000 டாலா் வழங்கப்படும்’ என்று டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




