
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா: முதல்முறையாக ஒப்புதல்
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதல்முறையாக அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க விமானப் படைச் செயலா் டிராய் மெயின்க்
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதல்முறையாக அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க விமானப் படைச் செயலா் டிராய் மெயின்க், ‘எதிரி நாடுகளின் தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுப் படைகளைப் பாதுகாக்கும் திறன் கொண்ட புவி சுற்று வட்டப்பாதை விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது’ என்றாா்.
எனினும், அந்த ஆயுதங்களின் விவரங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து அவா் விளக்கவில்லை.

முன்னதாக 2024-இல், விண்வெளியில் இருந்து செலுத்தக்கூடிய புதிய செயற்கைக்கோள் எதிா்ப்பு ஆயுதத்தை ரஷியா உருவாக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. அப்போது அந்த அச்சுறுத்தல், உடனடியாக எழக்கூடிய ஆபத்து அல்ல என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், அமெரிக்காவின் பிரதான கட்டமைப்பு வசதிகள் செயற்கைக்கோள் தகவல்தொடா்புகளையே பெரிதும் சாா்ந்திருப்பதால், ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து வரக்கூடிய விண்வெளி அச்சுறுத்தல்கள் குறித்த நீண்டகாலக் கவலையை இத்தகவல்கள் வெளிப்படுத்தின. இதையொட்டி, அதிபா் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் (2019-இல்) விண்வெளிப் படையை ஒரு தனிப்பிரிவாக உருவாக்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






