
வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!
நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது தொடர்பாக..

நிலநடுக்கங்கள் - file photo
வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி,
நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாகப் பதிவானது.
அடுத்ததாக அதிகாலை 4.28 மணிக்கு ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாகப் பதிவானது. இதன் மையப்புள்ளி முகு மாவட்டத்தின் கலாய் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தது.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா மற்றும் ஜும்லாவிலும் உணரப்பட்டன. எனினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
நில அதிர்வு அபாயம் அதிகம் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பின் அதிர்வுகள், கட்டமைப்புச் சேதங்கள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருவதால், அப்பகுதி தொடர்ந்து எச்சரிக்கை நிலையில் உள்ளது.
முன்னதாக, கடந்த செப். 26-ல் திபெத்-நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Two back-to-back earthquakes struck northwestern Nepal on Wednesday, authorities said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






