10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

நேபாள பெருவெள்ளம்! 1,252 ஆக உயர்ந்த உயிர்ப்பலி!

நேபாள பெருவெள்ளத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை பற்றி...

நேபாள பெரு வெள்ளம்

நேபாள பெரு வெள்ளம் - AP

Published On :3 செப்டம்பர் 2026, 12:21 pm IST

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252-ஆக உயர்வு.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் பெருவெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (செப்.3) நிலவரப்படி 1,252 ஆக உயர்ந்துள்ளது.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.

சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1,252-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,875 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்குநாள் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கடந்த 9-வது நாள்களாக நேபாள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளால் இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உடல்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், உயிர்ப்பலி நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

நேபாளக் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, சித்வான் மாவட்டத்தில் 355 உடல்களும், நவல்பரசி கிழக்கில் 218 உடல்களும், நவல்பரசி மேற்கில் 208 உடல்களும் (இதில் இந்தியாவில் மீட்கப்பட்டு நவல்பரசி மேற்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 18 உடல்களும் அடங்கும்), நுவாகோட்டில் 177 உடல்களும் மீட்கப்பட்டன.

அதேபோல, ரசுவா மாவட்டத்தில் 127 உடல்களும், கோர்க்காவில் 69 உடல்களும், தடிங்கில் 60 உடல்களும், தஹனுவில் 38 உடல்களும் மீட்கப்பட்டன.

The death toll due to the devastating flash floods in Nepal rose to 1,252 on Thursday as more bodies were recovered from the affected areas while thousands remain missing after more than a week of the disaster, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.