
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 626 ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாள பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

மீட்புப் பணிகளில் வீரர்கள். - படம் - பிடிஐ
நேபாள பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை 626 பலியானதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக இன்று (ஆக. 29) அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீட்பு ஆணையத்தின் (NDRRMA) தகவலின்படி, சிட்வானில் 233 உடல்களும், நவல்பராசி கிழக்கில் 158 உடல்களும், நுவாகோட்டில் 51 உடல்களும், கோர்காவில் 48 உடல்களும், நவல்பராசி மேற்கில் 47 உடல்களும், தாடிங்கில் 45 உடல்களும், தனாஹுவில் 31 உடல்களும் மற்றும் ரசுவாவில் 13 உடல்களும் மீட்கப்பட்டன என்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பெருவெள்ளத்தில் 320 இந்தியா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை என்றும் சீனப் பகுதியில் சுமார் 400 இந்தியா்கள் தவித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from the massive floods in Nepal has risen to 626.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







