
நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 538ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை உயர்ந்திருப்பது பற்றி...

நேபாள வெள்ளம்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
சித்வானில் 221 உடல்கள், கிழக்கு நவல்ராசியில் 134 உடல்கள், கோர்காவில் 46 உடல்கள, நுவாகோட்டில் 37 உடல்கள், தாடிங்கில் 33 உடல்கள், தனுவில் 28, மேற்கு நவல்ராசியில் 27, ரசுவாவில் 12 உடல்கள் மீட்ககப்பட்டுள்ளன என்று நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 977 பேர் மாயமாகியுள்ளனர். திபெத் எல்லையில் பனிச்சரிவு காரணமாக உருவான ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனால் மீட்புப் பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2,391 நேபாள ராணுவத்தினர் உட்பட 7,451 பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போதேகோஷி மற்றும் திரிசூலி பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குபடி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.
Summary
The death toll from flash floods in Nepal rose to 538 on Friday with more bodies recovered as search and rescue operations continue with caution following the threat of fresh flooding due to an increase in the water level of a lake formed by avalanches on the border with Tibet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






