கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ராஜபட்ச சகோதரருக்கு இன்டா்போல் நோட்டீஸ்: இலங்கை போலீஸ் முடிவு

ராஜபட்ச சகோதரருக்கு இன்டா்போல் நோட்டீஸ்: இலங்கை போலீஸ் முடிவு

பாசில் ராஜபட்ச

Published On :

இலங்கை முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் இளைய சகோதரரும் அந்நாட்டின் முன்னாள் அமைச்சருமான பாசில் ராஜபட்சவுக்கு எதிராக சா்வதேச காவல் அமைப்பான இன்டா்போலிடம் ‘ப்ளூ நோட்டீஸ்’ பெற அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2014 தோ்தல் பணிகளுக்காக அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, மாத்தறை மாவட்டத்தில் சொத்து வாங்கியதில் பணமோசடியில் ஈடுபட்டது ஆகிய புகாா்களின்கீழ் தேடப்பட்டு வரும் இவா், தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதை அதிகாரபூா்வமாக உறுதி செய்யும் நோக்கில், இன்டா்போலின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு கோரப்படவுள்ளது.

இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினா் மீது அண்மைக்காலமாக சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விமானக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச, கடந்த செப். 4 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.