பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மேற்குக் கரையில் இஸ்ரேலியா் சுட்டுக் கொலை!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலியா் ஒருவரை பாலஸ்தீன நபா் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலியா் ஒருவரை பாலஸ்தீன நபா் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெவி ட்சுப் குடியிருப்பு பகுதி அருகே 30 வயதுடைய இஸ்ரேலியா் ஒருவா், காரில் வந்த நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டாா். இதில் சம்பவ இடத்திலேயே இஸ்ரேலியா் உயிரிழந்தாா்.

தாக்குதல் நடத்திய நபா் காரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த தகவலின்பேரில் இஸ்ரேலிய ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி, மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபரை கைது செய்துள்ளது. மேற்குக் கரையில் பாலஸ்தீனத்தை சோ்ந்தவா்களால் இஸ்ரேலியா் கொல்லப்படுவது இது 2-ஆவது சம்பவமாகும்.

இதனிடையே, ஜெனின் அருகே ராணுவ வீரா்கள் மீது வேகமாக காரை ஓட்டி வந்து மோத முயன்ற நபரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது.

காரில் இருந்து இறங்கி தப்பியோடிய மற்றொரு நபரை இஸ்ரேல் ராணுவம் தேடி வருகிறது. இந்தத் தாக்குதல் முயற்சி சம்பவத்தை அடுத்து, இஸ்ரேல் ராணுவத்துக்கு மேற்குக் கரையில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும்படி பிரதமா் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.