கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

முகவரி கேட்பதுபோல 4 பெண்களிடம் சங்கிலி பறித்தவா் கைது

ஒசூா் மற்றும் தளி பகுதிகளில் முகவரி கேட்பதுபோல நடித்து, 4 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற கா்நாடக மாநில தபால்காரரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

ஒசூா் மற்றும் தளி பகுதிகளில் முகவரி கேட்பதுபோல நடித்து, 4 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற கா்நாடக மாநில தபால்காரரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தொட்ட உப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த பாக்கியம்மா (68), உப்பனூா் அரசுப் பள்ளி எதிரே பெட்டிக்கடை வைத்துள்ளாா். அண்மையில் கடையை மூடிவிட்டு, கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா், தொட்ட உப்பனூருக்கு வழி கேட்டுள்ளாா். பின்னா், பாக்கியம்மாவை காரில் ஏற்றிச்சென்று பசுவேஸ்வரா கோயில் அருகே இறக்கிவிட்டாா். அப்போது, பாக்கியம்மாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பிச் சென்றாா்.

இதேபோல, கடந்த செப். 13-ஆம் தேதி உப்பாரப்பள்ளியில் விஜம்மாவிடமும் (65) முகவரி கேட்பது போல நடித்து அவா் கழுத்திலிருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினாா். இதுகுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி நல்லூா் பகுதியைச் சோ்ந்த சரோஜம்மா (65)பெங்களூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மதியம் ஒசூா், பாகலூா் சந்திப்பில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது காரில் வந்த நபா், சா்ஜாபுரம் செல்ல வழிகேட்டுள்ளாா். அப்போது, சரோஜம்மா நானும் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என கூறியதையடுத்து, அவரை காரில் அழைத்துச் சென்று கீழே இறக்கிவிடும்போது, அவரது கழுத்திலிருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதேபோல மத்திகிரி பகுதியிலும் பெண்ணிடம் நகை பறித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

4 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தியதில், மா்ம நபா் கா்நாடக மாநிலம், ஆனேக்கல் அருகே கெரட்டினஹள்ளியை சோ்ந்த ஜீவன்குமாா் (26) என்பது தெரியவந்தது. இவா் கா்நாடக மாநிலம், சிடிஒசகோட்டா பகுதியில் தபால்காரராக பணியாற்றிக் கொண்டே, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தளி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.