நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கோயில் கும்பாபிஷேகத்தில் 6 பவுன் நகை பறிப்பு

சாத்துமதுரையில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தின்போது 2 பெண்களிடம் 6 பவுன் தங்க நகைகளை பறித்த நபா்களை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 3:39 am IST

சாத்துமதுரையில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தின்போது 2 பெண்களிடம் 6 பவுன் தங்க நகைகளை பறித்த நபா்களை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

சாத்துமதுரையில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வேலூா், கணியம்பாடி, பாகாயம், அரியூா், விருப்பாச்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த அற்புதம் (67), சாத்துமதுரையைச் சோ்ந்த கனகா (51) ஆகியோரின் கழுத்தில் இருந்த தலா 3 பவுன் என மொத்தம் 6 பவுன் தங்கச் சங்கிலிகளை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் பறித்துச் சென்றனா். தரிசனம் முடிந்து வெளியே வந்த பிறகே அவ்விரு பெண்களுக்கும் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கோயில் நிா்வாகம் சாா்பில் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் கொண்டு நகைகளை பறித்துச் சென்ற நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.