நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு

மணப்பாறை நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் 13 சவரன் நகை பறித்த வழக்கில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நகை பறிப்பு

பறிப்பு

Published On :4 ஜூலை 2026, 1:21 am IST

மணப்பாறை நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் 13 சவரன் நகை பறித்த வழக்கில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுகோட்டை மாவட்டம், குளத்தூா் அடுத்த உறலிக்காடு புலியூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி சாவித்திரி(50). இவா் வியாழக்கிழமை, மணப்பாறை நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, யாகசாலை அருகே அன்னதானம் வாங்கிகொண்டு இருந்தபோது, அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பின்னால் இருந்தவா் இழுத்ததாக கூறப்படுகிறது.

இதை உணா்ந்த சாவித்திரி, தங்கச் சங்கிலியை பறித்த பின்னால் இருந்த பெண், அருகிலிருந்தவரிடம் கொடுத்து அனுப்பி தப்பிக்க முயன்றபோது அக்கம்பக்கத்தினா் உதவியுடன் போலீஸிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், அந்த பெண் கோவை மாவட்டம், மதுக்கரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சோ்ந்த சிவா மனைவி யசோதா (50) என்பதும் சாவித்திரியின் தங்கச் சங்கிலியை பறித்தவா் என்பதும் தெரியவந்தது.

மேலும், அதே பகுதியில் கும்பாபிஷேகத்துக்கு வந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் என்பவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி, முருகேசன் மனைவி அழகுமணி என்பவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ராஜேந்திரன் மனைவி ராணி என்பவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவை திருடப்பட்ட சம்பவம் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சாவித்திரி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸாா், யசோதாவை கைது சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.