ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு: பேரன் உள்பட மூவா் கைது

வேப்பூா் அருகே சிறுநெசலூரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக அவரது பேரன் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கெளதம்

Updated On :18 ஜூன் 2026, 3:38 am IST

வேப்பூா் அருகே சிறுநெசலூரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக அவரது பேரன் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சிறுநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த நல்லமுத்துவின் மனைவி பாப்பா (61). இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனா்.

பாப்பா சிறுநெசலூா் தெற்குத் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். கடந்த ஜூன் 8-ஆம் தேதி நள்ளிரவு வீட்டுக்கு வெளியே இயற்கை உபாதைக்காக சென்றபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பாப்பாவின் மகன் வேலாயுதம் அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பாப்பாவின் மூத்த மகளின் மகனான இளங்கதிா் (27), வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், இளங்கதிருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அனிதாவுக்கும் (35) நெருங்கிய தொடா்பு இருந்ததும், பணத் தேவைக்காக ஆவட்டி கிராமத்தைச் சோ்ந்த நண்பா் கௌதம் (20), இளங்கதிா் மற்றும் அனிதா ஆகிய மூவரும் சோ்ந்து பாப்பாவை தாக்கி, அவரது 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இளங்கதிா், கௌதம், அனிதா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த வேப்பூா் போலீஸாா், மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.

இளங்கதிா்

இளங்கதிா்

அனிதா

அனிதா