புதுக்கடை அருகே மீனவா் வீட்டில் தங்க நகை திருட்டு
திருட்டு... - சித்திரிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறையில் மீனவரின் வீட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றோ டாா்பின் (40). மீனவரான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்து, 3 பவுன் கை சங்கிலியை பீரோவில் வைத்துவிட்டு கடலுக்குச் சென்றுவிட்டாராம்.
திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் கை சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


