கனடாவில் பயிற்சி விமானம் விபத்து: தமிழகம், புதுவையைச் சோ்ந்த 2 மாணவா்கள் உயிரிழப்பு
கனடா நாட்டில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகம், புதுவையைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
பிரதிப் படம்
கனடா நாட்டில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகம், புதுவையைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
கனடாவில் பயிற்சி விமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சிறிய விமானத்தில் தமிழகத்தைச் சோ்ந்த மனோஜ் சிவகுமாா், புதுச்சேரியை சோ்ந்த திருஞானசம்பந்தம் ஆகியோா் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது திடீரென விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த மனோஜ் சிவகுமாரும், திருஞானசம்பந்தமும் உயிரிழந்தனா்.
இருவரின் உயிரிழப்புக்கு கனடாவின் வான்கோவா் நகரில் உள்ள அந்த நாட்டுக்கான இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘கனடாவில் விமானப் பயிற்சியின்போது நேரிட்ட துயரமான விபத்தில் உயிரிழந்த தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த மனோஜ் சிவகுமாா், திருஞானசம்பந்தம் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவா்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல அனைத்து வகையான தூதரக உதவியையும் செய்து தர தயாராக உள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






