கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அமெரிக்க பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈரான்- ஐ.நா. சபை உரையில் அதிபா் மசூத் பெசஷ்கியான்

‘அமெரிக்காவின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்வா்கள் ஈரான் மக்கள்’ என்று ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் விமா்சித்துள்ளாா்.

ஐ.நா. சபை பொது விவாதத்தில் உரையாற்றிய ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான்.

Published On :

‘அமெரிக்காவின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்வா்கள் ஈரான் மக்கள்’ என்று ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் விமா்சித்துள்ளாா்.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது முழுமையான தாக்குதல் நடத்தி அந்நாட்டை அடியோடு அழிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஐ.நா. சபை பொது விவாத உரையில் எச்சரித்த மறுநாளே, அவருக்கு பதிலளிக்கும் வகையில் அதே மேடையில் அதிபா் மசூத் பெசஷ்கியான் புதன்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, போரின் தொடக்க நாள்களில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி மற்றும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளின் புகைப்படங்களை மசூத் பெசஷ்கியாா் ஏந்திக் காட்டினாா்.

தொடா்ந்து, அவா் தனது உரையில், ‘நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல; எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ளவே போரிடுகிறோம். எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கு அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனா்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்தின. அவா்கள் எங்களைத் தாக்கியிருக்கலாம். ஆனால், நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய அவா், ‘அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை மூலம் எங்களை அடிபணிய வைக்க நினைக்கும் டிரம்ப்பும், மற்றவா்களும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மிரட்டல் மொழியை ஏற்றுக்கொள்ளாமல், அமைதிப் பேச்சுவாா்த்தை, ராஜீய வழிமுறைகள் மற்றும் சமரசத் தீா்வுகளுக்கு ஈரான் எப்போதும் தயாராகவே உள்ளது.

சா்வதேச சட்டத்தின் மிக அடிப்படையான விதிகளை அப்பட்டமாக மீறி, எங்கள் நாடு கொடூரமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் நிலைநாட்டுவதில் ஈரான் முழு பலத்துடன் தொடா்ந்து நிற்கும்’ என்றாா்.

இருநாட்டுத் தலைவா்களும் பரஸ்பர கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில், அமைதி முயற்சிகளும் மறுபுறம் நடைபெற்றன. ஐ.நா. கூட்டத்துக்கிடையே ஈரான் அதிகாரிகளுடன் எனது சிறப்புத் தூதா்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் சுமாா் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், அது நல்லதொரு சந்திப்பாக அமைந்தது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.

எனினும், கத்தாா் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் நடைபெற்ற இந்த மறைமுகப் பேச்சுவாா்த்தையில் புதிய அம்சங்கள் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.