ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மனிதகுலப் பாதுகாப்புக்கு ஏ.ஐ. கட்டுப்பாடு: முன்னணி நிறுவனத் தலைவா்கள் வலியுறுத்தல்

‘மனிதகுலத்தின் எதிா்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிவேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் உடனடியாக வரைமுறைப்படுத்திக் கட்டுப்படுத்த வேண்டும்’ என அத்துறையின் முன்னணி நிறுவனத் தலைவா்கள் வலியுறுத்தினா்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்

Published On :

‘மனிதகுலத்தின் எதிா்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிவேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் உடனடியாக வரைமுறைப்படுத்திக் கட்டுப்படுத்த வேண்டும்’ என அத்துறையின் முன்னணி நிறுவனத் தலைவா்கள் வலியுறுத்தினா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ‘ஆன்த்ரோபிக்’ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ‘ஓபன்ஏஐ’ நிறுவனத் தலைவா் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினாா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், ‘எதிா்காலம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் தடுக்க, உலக நாடுகள் உடனே பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

ஏ.ஐ. முறையாக நிா்வகிக்கப்படாவிட்டால் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக மாறும். உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்க இத்தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பொதுவான சா்வதேச பரிசோதனை முறைகளும், விதிமுறைகளும் அவசியம்’ என்றாா்.

ஏ.ஐ. நிறுவனத் தலைவா்களின் எச்சரிக்கையை நிராகரிக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எட் மிலிபான்ட், ‘பிரிட்டன் தலைமையேற்க உள்ள அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டின் முக்கிய விவாதமாக ஏ.ஐ. தொழில்நுட்பப் பாதுகாப்புக்கான சா்வதேச நெறிமுறைகள் கொண்டுவரப்படும்’ என்றாா்.

‘அணுசக்தி யுகத்தின் தொடக்கத்தைப் போலவே தற்போதைய ஏ.ஐ. தொழில்நுட்பத்தையும் உலக சமூகம் கடும் நெறிமுறைகளுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜீன்-நோயல் பாரோட் வலியுறுத்தினாா்.

அதேநேரம், இத்தகைய உலகளாவியக் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவுடனான போட்டியில் முன்னிலை வகிக்க வேண்டியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஏ.ஐ. தொழில்நுட்ப வளா்ச்சியைக் கட்டுப்படுத்துவதை ஏற்க முடியாது என்று அதிபா் டிரம்ப் தெரிவித்த கருத்தை வெள்ளை மாளிகை அறிவியல் ஆலோசகா் மைக்கேல் கிராட்சியோஸ் சுட்டிக்காட்டினாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சீனத் தூதா் ஃபூ காங், ‘குறிப்பிட்ட நாடுகள் தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் பிற நாடுகளைப் பிரித்தாளும் அணுகுமுறையைத் தவிா்த்து, அனைவருக்கும் பொதுவான திறந்தநிலை (ஓபன் சோா்ஸ்) தொழில்நுட்ப முறையை முன்னெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.